முன்னுரை

இது ஒரு காதலை ஒட்டி, அன்றாட வாழ்க்கையில் நடக்கும் நிகழ்வுகளின் மையமாக வைத்து எனது வெளிப்பாடு.

சுருக்கமாக முற்போக்கு சிந்தனை உடைய ஒரு ஆண், இவனைப்போல் முற்போக்கு சிந்தனையில்லாத ஒரு பெண்ணை சந்திக்கிறான் கண்டதும் காதல் வசபடுகிறான். சிறிது சிறிதாக இவளை மாற்ற முயல்கிறான்.

இதில், இருவருக்கும் இடையே நடக்கும் உரையாடல், அவர்களுக்கிடையே பொங்கும் காதல் என இத்தொகுப்பில் கொண்டுவர முயற்சித்திருக்கிறேன்.

Friday, July 27, 2007

1.2 எதிர்பார்த்து இருந்தேன்

எதிர்பார்த்து இருந்தேன்
காதலாய் வந்தாள், கண்சிமிட்டி நின்றாள்
ஒரு கணமே கண்டேன்...சிலையாகப் பதிந்தாள்
பளிங்காகச் சிரித்தாள் என் இதயத்தைத் திறந்தாள்
கண் மூடி நின்றேன்..இதயத்தில் நின்றாள்
தனியாகச் சென்றேன் அவளோடு பேச

நதியோரம் நானும் என் இதயத்தில் அவளும்
பூஞ்சோலை முழுதும் உலாவாகச் சென்றோம்
நிழலாக மரமும் இதமாக அவளும்
புல்வெளியில் தனியே நதியின் மெல்லிசையில்
என் இதயத்தில் அவளும் அவள்மடியில் நானும்
கனவுகள் கலைய, இமைகளும் விரிய
மென்மையாகச் சிரித்தேன் எதிர்பார்த்து இருந்தேன்.

Thursday, July 26, 2007

1.1 கணப்பொழுதே ஆனாலும் கனமாகப் பதிந்தாள்

மெல்லெனத் திறந்த கதவினூடே
சில்லென விடிகாலைத் தென்றல்
ஆமைபோல் நுழைந்ததென் போர்வையினூடே
விரைந்து விழித்ததுள்ளம் அவள் நினைவால்

சிற்பமோ? சித்திரமோ? அவள் ஆக்கிரமித்தாள்
இதயம் முழுவதும் குருதி புகமுடியாமல்
அகலா நினைவால், இலையான யென்னுள்ளம்
இறைவா!! மலை போல் கனத்தாள்

எங்கு கண்டேன் எவ்வாறு கண்டேன்
ஏன் கண்டேன் என்னைக் கொல்ல
அவள் நினைவால் என்
உயிர் வாடும் மெல்ல மெல்ல

உச்சியில் ஆதவன் கோபமாய் வீச
துள்ளளாய் வந்தாள் பேருந்தில் ஏற
சில்லென முறைத்தாள் முழுமையாய் உறைந்தேன்
கணப்பொழுதே ஆனாலும் கனமாகப் பதிந்தாள்.