அடடா! கேமரா இல்லாமல் போனதே
இந்த வேட்க்கதத்தை அதனுள் அடைக்க
என்ன ஒரு இரம்மியமான மாலை?
அறை நிலவு, குளத்தில் குப்பைகளுக்கு ஊடே பிம்பமாய்
தெருவெங்கும் தோரணமாய் பூமாலை கடைகள்
பன்னீர் வாசம் இரோஜக்களின் உரசல்
முழுதாய் இழுத்த மூச்சை மெதுவாக விட்டான்
ஆமாம் என்னிடம் நீங்கள் என்ன பேச வேண்டும்?
ஏன் நானதை கேட்க்கவேண்டும்?
ஹ ஹ ஹ பெண்கள் திருந்தவே மாட்டீரா?
இதே வசனத்தை எத்தனை முறை கூறுவீர்?
ஓஹோ! எத்தனை பெண்களிடம் இப்படி
மாலை வா பேசவேண்டும் என்றீர்?
அவள் பொய் சீற்ரமாய்!
இவன் தலை திருப்பி நகைத்தான்
ஓரக்கண்களால் அவளைக் கண்டு
ஹே என்னை மனப்பாயா? உன்னை பிடித்திருக்கிறது
எதையோ கைகாட்டினான்
சுவரொட்டியில், அழகாய் இருக்கிறாய் பயமாய் இருக்கிறது
பயப்பட நான் என்ன பேயா?
பேய்கள் இவ்வளவு அழகாய்
இனிமையாய் இருக்குமா என்ன?
அவள் தன்னை சுற்றி பார்த்தாள்
மயிலை தெற்கு மாட வீதி
பூக்கடைகள் போக்குவரத்து நெரிசல்
காதலை சொல்ல இதுவா இடம்? என்றாள் முகம் சுளித்து
ஆம்! என்றால் இப்படியே மாலை போடலாமென்று,
நகைத்தான் நகைத்தாள் மௌனமானாள்!
முன்னுரை
இது ஒரு காதலை ஒட்டி, அன்றாட வாழ்க்கையில் நடக்கும் நிகழ்வுகளின் மையமாக வைத்து எனது வெளிப்பாடு.
சுருக்கமாக முற்போக்கு சிந்தனை உடைய ஒரு ஆண், இவனைப்போல் முற்போக்கு சிந்தனையில்லாத ஒரு பெண்ணை சந்திக்கிறான் கண்டதும் காதல் வசபடுகிறான். சிறிது சிறிதாக இவளை மாற்ற முயல்கிறான்.
இதில், இருவருக்கும் இடையே நடக்கும் உரையாடல், அவர்களுக்கிடையே பொங்கும் காதல் என இத்தொகுப்பில் கொண்டுவர முயற்சித்திருக்கிறேன்.
சுருக்கமாக முற்போக்கு சிந்தனை உடைய ஒரு ஆண், இவனைப்போல் முற்போக்கு சிந்தனையில்லாத ஒரு பெண்ணை சந்திக்கிறான் கண்டதும் காதல் வசபடுகிறான். சிறிது சிறிதாக இவளை மாற்ற முயல்கிறான்.
இதில், இருவருக்கும் இடையே நடக்கும் உரையாடல், அவர்களுக்கிடையே பொங்கும் காதல் என இத்தொகுப்பில் கொண்டுவர முயற்சித்திருக்கிறேன்.
Saturday, November 24, 2007
Monday, October 1, 2007
1.17 அறிமுகம்
அதே நேரம், அதே பேருந்து, அவனும் இவளும்
அவன் அவனிடத்தில், இவள் இவளிடத்தில்
அவரவர் அலுவல் சென்றனர் இருவரும்
அவளிறங்கியதும் இவனிறங்கி குறுக்கிட்டான்
திடுக்கிட்டாள், புன்னகைத்தான், கம்பீரமாய்
ஹாய்! நான் கார்த்திக், இரு நிமிடம்!
பேசவேண்டும்! மாலை சந்திப்போம்!
ஆறு மணி, கபாலீச்வரர் கோவில்!
காத்திருப்பேன், காக்க வைக்காதே!
சீ யூ பை! ஓடும் பேருந்தில் ஏறினான் கை வீசி
சிலையென நின்றாள்! அதற்குள் மறைந்தான்
இருநிமிடம் மௌனமனாள்!
மாலை எழேகால்! கோவிலுக்கு வரவில்லை!
மயிலை பேருந்து நிருத்தம்,
மாலை நெருசலில் பிதுங்கி இறங்கினாள்!
தெருமுனையில் இவன் இருப்பதை அவள் கண்டாள்
கையில் தேனீர் கோப்பையோடு
கண்டாள் சென்றாள்! இவனுக்கது
குற்றமாய் பார்பதாய் தெரியவில்லை
வரவேற்பதாகவும் தெரியவில்லை
அதென்ன பார்வையோ, புரியவில்லை
ஹாய்! மீண்டும் குறுக்கிட்டான்!
நகர்ந்து சென்றாள், கூடவே இவனும்,
"கேள்! உன் பெயர் மஹன்னீயா!" என்றான்
பதிலுக்கு "இருபத்தி மூன்று வருடங்களாக அதேதான், யார் மறுத்தார்?" என்றாள் அகந்தையாய்,
"ஹ ஹ ஹ! நன்றி உன் வயதை கூறியதற்கு"
உளரியதை உணர்ந்து உதட்டை கடித்தாள்!
அவன் அவனிடத்தில், இவள் இவளிடத்தில்
அவரவர் அலுவல் சென்றனர் இருவரும்
அவளிறங்கியதும் இவனிறங்கி குறுக்கிட்டான்
திடுக்கிட்டாள், புன்னகைத்தான், கம்பீரமாய்
ஹாய்! நான் கார்த்திக், இரு நிமிடம்!
பேசவேண்டும்! மாலை சந்திப்போம்!
ஆறு மணி, கபாலீச்வரர் கோவில்!
காத்திருப்பேன், காக்க வைக்காதே!
சீ யூ பை! ஓடும் பேருந்தில் ஏறினான் கை வீசி
சிலையென நின்றாள்! அதற்குள் மறைந்தான்
இருநிமிடம் மௌனமனாள்!
மாலை எழேகால்! கோவிலுக்கு வரவில்லை!
மயிலை பேருந்து நிருத்தம்,
மாலை நெருசலில் பிதுங்கி இறங்கினாள்!
தெருமுனையில் இவன் இருப்பதை அவள் கண்டாள்
கையில் தேனீர் கோப்பையோடு
கண்டாள் சென்றாள்! இவனுக்கது
குற்றமாய் பார்பதாய் தெரியவில்லை
வரவேற்பதாகவும் தெரியவில்லை
அதென்ன பார்வையோ, புரியவில்லை
ஹாய்! மீண்டும் குறுக்கிட்டான்!
நகர்ந்து சென்றாள், கூடவே இவனும்,
"கேள்! உன் பெயர் மஹன்னீயா!" என்றான்
பதிலுக்கு "இருபத்தி மூன்று வருடங்களாக அதேதான், யார் மறுத்தார்?" என்றாள் அகந்தையாய்,
"ஹ ஹ ஹ! நன்றி உன் வயதை கூறியதற்கு"
உளரியதை உணர்ந்து உதட்டை கடித்தாள்!
Tuesday, September 25, 2007
1.16 ஸ்கூட்டியில் என் தேவதை
கனவல்ல! அஃதே அவள் வீடு! உறுதியானது
அவள் வாகனத்தோடு வெளியே வந்தாள்
குளிக்கவில்லை இன்னும், ஆனாலும் அழாகாய்
இருந்தாள், தூக்கம் தெளியாமல்
எங்கே செல்வாளோ தெரியவில்லை
கேட்டால் தான் சொல்வாளோ?
உன் பெயறென்ன சொல்வாயோ அழகே?
மனதிற்குள் கேட்டான் விடையின்றி
வரும் வரை காத்திருப்போமா?
இல்லை... பின் தொடர்வோமா? விடிகாலை
ஆதவன் பொற்பிழம்பாய் உதித்தான் அழகாக
அதே தேனீர் கடையில் சூடாய் தேனீர்
பால் வாங்கி வந்தாள் பனியில் நினைந்து
வாசல் தெளித்து கோலமிட்டாள்
அவள் போட்டதால் இவனுக்கது அழகாய்
பலகோணங்களில் புகைப்படம் இவன் கண்களால்!
அவள் வாகனத்தோடு வெளியே வந்தாள்
குளிக்கவில்லை இன்னும், ஆனாலும் அழாகாய்
இருந்தாள், தூக்கம் தெளியாமல்
எங்கே செல்வாளோ தெரியவில்லை
கேட்டால் தான் சொல்வாளோ?
உன் பெயறென்ன சொல்வாயோ அழகே?
மனதிற்குள் கேட்டான் விடையின்றி
வரும் வரை காத்திருப்போமா?
இல்லை... பின் தொடர்வோமா? விடிகாலை
ஆதவன் பொற்பிழம்பாய் உதித்தான் அழகாக
அதே தேனீர் கடையில் சூடாய் தேனீர்
பால் வாங்கி வந்தாள் பனியில் நினைந்து
வாசல் தெளித்து கோலமிட்டாள்
அவள் போட்டதால் இவனுக்கது அழகாய்
பலகோணங்களில் புகைப்படம் இவன் கண்களால்!
Friday, August 31, 2007
1.15 அவள் வீட்டை கனவினில் கண்டேனோ?
தாழிட்ட கதவுகளை தட்ட தாய் திறந்தாள்
தன்வீட்டிற்கு எப்படி வந்தேன்? முழித்தான்!
அவள் வீட்டுக்கதவையன்றோ தட்டுவதாய் நினைத்தேன்
அச்சோ இதுவரை கண்டது கற்பனையோ? கனவோ?
கனவின்றி இருக்க வேண்டினான்
என்னவாயிற்று இவனுக்கு எதைபற்றி யோசிப்பு
விளங்காமல் வினவினாள் தாய்
எந்த சாவியை தேடிச் சென்றாய்?
ஒருவரை கண்டேன் பழக்கமுற்றவரோ
என யோசித்தேன் யாராகயிருக்குமோ
விளங்காமல் வியப்புடன் ஆராய்கின்றேன்
என கூறி தாயிடம் விடைபெற்று சமாளித்தான்
நாளை காலை வெள்ளெனச்சென்று
அவள் வீட்டை உறுதி செய்ய முனைந்து
சட்டென்று உறங்கினான் உணவுண்ணாமல்
இன்று நடந்தவை மறுஒளிபரப்பானது கனவினில்!
தன்வீட்டிற்கு எப்படி வந்தேன்? முழித்தான்!
அவள் வீட்டுக்கதவையன்றோ தட்டுவதாய் நினைத்தேன்
அச்சோ இதுவரை கண்டது கற்பனையோ? கனவோ?
கனவின்றி இருக்க வேண்டினான்
என்னவாயிற்று இவனுக்கு எதைபற்றி யோசிப்பு
விளங்காமல் வினவினாள் தாய்
எந்த சாவியை தேடிச் சென்றாய்?
ஒருவரை கண்டேன் பழக்கமுற்றவரோ
என யோசித்தேன் யாராகயிருக்குமோ
விளங்காமல் வியப்புடன் ஆராய்கின்றேன்
என கூறி தாயிடம் விடைபெற்று சமாளித்தான்
நாளை காலை வெள்ளெனச்சென்று
அவள் வீட்டை உறுதி செய்ய முனைந்து
சட்டென்று உறங்கினான் உணவுண்ணாமல்
இன்று நடந்தவை மறுஒளிபரப்பானது கனவினில்!
Wednesday, August 29, 2007
1.14 அஃதே அவள் வீடுபோலும்
மறைந்தது எந்த வீட்டிற்குள்ளோ?
அடக்கடவுளே! எனக்கேன் இத்தனை சோதனை?
எந்த வீடென்று எப்படி அறிவேன்?
சற்றே பொறுப்போம் வழி பிறக்கும்! பொறுத்தான்
பொறுத்த வேளையிலே தேனீர் பருக
கடைக்காரன், " என்ன சாமி தேனீ குடிக்கவா
இந்த வேகம் ஒடியாந்த", என்றான் நக்கலாய்
புன்னகித்து தெருவை நோட்டம் விட்டான்
'விட்ட சாவியையா தேட வந்தோம்?'
தனக்குத்தானே எள்ளி நகைத்தான்
சற்றே தொலைவில் மீண்டும் அவள்!
அறிவுசட்டேன்று பொறுத்திருக்க கட்டளையிட்டது
கட்ட்ளை மீறாமல் தொலைவில் நோக்கினான்
வாழ்வின் தொலைநோக்கில் அவளும் பகிர்வாளோ?
மறுபடியும் ஒரு வீட்டிற்குள் நுழைந்தாள்
அஃதே அவள் வீடுபோலும், சென்றவள், கதவை தாழிட்டாள்!
அடக்கடவுளே! எனக்கேன் இத்தனை சோதனை?
எந்த வீடென்று எப்படி அறிவேன்?
சற்றே பொறுப்போம் வழி பிறக்கும்! பொறுத்தான்
பொறுத்த வேளையிலே தேனீர் பருக
கடைக்காரன், " என்ன சாமி தேனீ குடிக்கவா
இந்த வேகம் ஒடியாந்த", என்றான் நக்கலாய்
புன்னகித்து தெருவை நோட்டம் விட்டான்
'விட்ட சாவியையா தேட வந்தோம்?'
தனக்குத்தானே எள்ளி நகைத்தான்
சற்றே தொலைவில் மீண்டும் அவள்!
அறிவுசட்டேன்று பொறுத்திருக்க கட்டளையிட்டது
கட்ட்ளை மீறாமல் தொலைவில் நோக்கினான்
வாழ்வின் தொலைநோக்கில் அவளும் பகிர்வாளோ?
மறுபடியும் ஒரு வீட்டிற்குள் நுழைந்தாள்
அஃதே அவள் வீடுபோலும், சென்றவள், கதவை தாழிட்டாள்!
Monday, August 27, 2007
1.13 அதற்குள் மறைந்தாள்
வீடு வரை வந்ததும் தலை சொறிந்தான்
எதையோ தேடுவது போல் பாவித்தான்
"என்ன தடவுகிறாய்" என்றனள் தாய்"
வண்டிச் சாவியை காணவில்லை"
"விழுந்து எழுந்ததில் விழுந்திருக்கும் போலும்
விட்ட சாவியை தேடி வருகிறேன்
வரும்போது உனக்கேதும் வாங்கிவரவா?"
விடைவருமுன் விரைந்தான் கோவிலுக்கு
"என்ன இப்படி பிதற்றினேன்?
கோவிலுக்கு நடந்தல்லவா வந்தோம்?
என்னவானால் என்ன வரவேண்டும் வந்தாயிற்று
என்னவள் அங்கு இருப்பாளோ?"
கோவில் வீதி நுழைந்தேன்
அவள் எதிர் வீதியில் திரும்பி மறைந்தாள்
நல்லவேளை கண்டுகொண்டேன்
விரைந்தேன், எந்த வீட்டில் அதற்குள் மறைந்தாள்?
எதையோ தேடுவது போல் பாவித்தான்
"என்ன தடவுகிறாய்" என்றனள் தாய்"
வண்டிச் சாவியை காணவில்லை"
"விழுந்து எழுந்ததில் விழுந்திருக்கும் போலும்
விட்ட சாவியை தேடி வருகிறேன்
வரும்போது உனக்கேதும் வாங்கிவரவா?"
விடைவருமுன் விரைந்தான் கோவிலுக்கு
"என்ன இப்படி பிதற்றினேன்?
கோவிலுக்கு நடந்தல்லவா வந்தோம்?
என்னவானால் என்ன வரவேண்டும் வந்தாயிற்று
என்னவள் அங்கு இருப்பாளோ?"
கோவில் வீதி நுழைந்தேன்
அவள் எதிர் வீதியில் திரும்பி மறைந்தாள்
நல்லவேளை கண்டுகொண்டேன்
விரைந்தேன், எந்த வீட்டில் அதற்குள் மறைந்தாள்?
Friday, August 24, 2007
1.12 வெட்கினான் சிறிது
ஆகா! கண்மூடினாலே கனவா? வியப்பாய்!
அவளே அது! இவன்முன்னே நிதர்சனமாய்
சுதாரித்தான்! மறுகணம் முகம் மாறியது
சட்டென்று மணம் அறிவிடம் சரணடைந்தது.
இதென்ன சினிமாவை போல நிகழ்கிறதே?
நம்பகத்தன்மையற்றதாய் உளதே?
என்னை நானே எமாற்றிக்கோள்ள விதியிடும் சதியோ?
ஏன்? நான்னென்ன காதல் செய்யக்கூடா எதியோ?
இறைஞ்சு கழித்து கவிழ்ந்து எழுந்து
அன்னையுடன் வந்ததை மறந்து ஏதோ,
பித்துற்றவனாய் வெறித்து வெறித்து தெரு
வெல்லாம்தெளிவுற்றான் திடீறென பூட்டிய வீட்டின் முன்னே
கோவிலில் தாய்யை விட்டோமே! தேடிக்கோண்டிருப்பாளோ?
பின்தொடர்ந்து அவள் வீடறியும் வாய்பையும் விட்டோமே
அங்கேயே இன்னும் இருப்பாளோ?
'எங்கேயடா சென்றாய் என்னை விட்டு?' என்றனள் தாய்
'அச்சோ அம்மா! அது.. வந்து..விடு' வெட்கினான் சிறிது
அவளே அது! இவன்முன்னே நிதர்சனமாய்
சுதாரித்தான்! மறுகணம் முகம் மாறியது
சட்டென்று மணம் அறிவிடம் சரணடைந்தது.
இதென்ன சினிமாவை போல நிகழ்கிறதே?
நம்பகத்தன்மையற்றதாய் உளதே?
என்னை நானே எமாற்றிக்கோள்ள விதியிடும் சதியோ?
ஏன்? நான்னென்ன காதல் செய்யக்கூடா எதியோ?
இறைஞ்சு கழித்து கவிழ்ந்து எழுந்து
அன்னையுடன் வந்ததை மறந்து ஏதோ,
பித்துற்றவனாய் வெறித்து வெறித்து தெரு
வெல்லாம்தெளிவுற்றான் திடீறென பூட்டிய வீட்டின் முன்னே
கோவிலில் தாய்யை விட்டோமே! தேடிக்கோண்டிருப்பாளோ?
பின்தொடர்ந்து அவள் வீடறியும் வாய்பையும் விட்டோமே
அங்கேயே இன்னும் இருப்பாளோ?
'எங்கேயடா சென்றாய் என்னை விட்டு?' என்றனள் தாய்
'அச்சோ அம்மா! அது.. வந்து..விடு' வெட்கினான் சிறிது
1.11 வணங்கி நின்றாள் இவன் முன்னே
அவள் நினைவிலேயே வீடு வர
சிற்றுண்டியை உண்டான் ஆற அமர
நாற்காலியில் அமர்ந்தபடியே கண்ணசர
கணவினில் கண்டான் கண் குளிர
கோவிலில் சேன்று இறை வணங்க
தாய் அழைத்ததும் இவன் இணங்க
பவ்வியமாய் சென்றான் இறையிடம் விடை கேட்க்க
கை கூப்பி ந்ன்றான் இமை இருக
"இறைவா தருவாய் அவளை வரமாய்
இருப்பேன் அவளுக்கு சேயாய் தாயாய்
கண்ணுக்கு கண்னாய் உயிருக்கு உயிராய்
என் ஆயுள் முழுதாய் அதர்க்கும் மேலாய்"
சலனமே இல்லாமல் காதலிக்க முனைந்தான்
யாருக்கும் குறை இல்லாமல் காதலியை மனக்க
இறையருள் வேண்டி மௌணத்தில் கெஞ்சி
இருகிய கண்கள் விரிய, வரமாய், பதிலாய்,
இமை மூடி வணங்கி நின்றாள் இவன் முன்னே!
சிற்றுண்டியை உண்டான் ஆற அமர
நாற்காலியில் அமர்ந்தபடியே கண்ணசர
கணவினில் கண்டான் கண் குளிர
கோவிலில் சேன்று இறை வணங்க
தாய் அழைத்ததும் இவன் இணங்க
பவ்வியமாய் சென்றான் இறையிடம் விடை கேட்க்க
கை கூப்பி ந்ன்றான் இமை இருக
"இறைவா தருவாய் அவளை வரமாய்
இருப்பேன் அவளுக்கு சேயாய் தாயாய்
கண்ணுக்கு கண்னாய் உயிருக்கு உயிராய்
என் ஆயுள் முழுதாய் அதர்க்கும் மேலாய்"
சலனமே இல்லாமல் காதலிக்க முனைந்தான்
யாருக்கும் குறை இல்லாமல் காதலியை மனக்க
இறையருள் வேண்டி மௌணத்தில் கெஞ்சி
இருகிய கண்கள் விரிய, வரமாய், பதிலாய்,
இமை மூடி வணங்கி நின்றாள் இவன் முன்னே!
Thursday, August 23, 2007
1.10 கனவில் எத்தனை சுகம்!!
மனம் பலமானதோ? பணியிடையில் நினைவில்லை.
மாலையில் பேருந்து கூட்டத்தில் தனிமையில்
கண்மூடி நானிருக்க அவள் நினைவு
கருமேகமாய் புரண்டுவந்து கனிய
பல கேள்விகள் பல சிந்தனைகள்
பல முறை அவள் முகம்
புகையென என் இமையுள்
படுத்தும் உறங்க இருமணிநேரம்
மணந்த கையோடு நானும் அவளும்
புதுவாகனத்தில் இடவலமாய் அமர
வழியில் கவனமின்றி கண்ணடிக்க
வெட்கத்தில் அவள் நாணி நெளிய
ஓய்வாக சாலையோரம் வாகனத்தில்
நெஞ்சோடு அள்ளி அவளணைக்க- கவலையற்ற
குழந்தையாய் எனக்கே எனக்காய் அவள்
கலைந்த கனவில் எத்தனை சுகம்!!
மாலையில் பேருந்து கூட்டத்தில் தனிமையில்
கண்மூடி நானிருக்க அவள் நினைவு
கருமேகமாய் புரண்டுவந்து கனிய
பல கேள்விகள் பல சிந்தனைகள்
பல முறை அவள் முகம்
புகையென என் இமையுள்
படுத்தும் உறங்க இருமணிநேரம்
மணந்த கையோடு நானும் அவளும்
புதுவாகனத்தில் இடவலமாய் அமர
வழியில் கவனமின்றி கண்ணடிக்க
வெட்கத்தில் அவள் நாணி நெளிய
ஓய்வாக சாலையோரம் வாகனத்தில்
நெஞ்சோடு அள்ளி அவளணைக்க- கவலையற்ற
குழந்தையாய் எனக்கே எனக்காய் அவள்
கலைந்த கனவில் எத்தனை சுகம்!!
1.9 சபலப்பட்டது உள்ளம்
நொடியாய்ப் பறந்தது மணிநேரப் பொழுது
என் பேருந்து நிறுத்தம் வந்தும் அவள்
இறங்கவில்லை எனக்கோ இறங்க மனமில்லை
இரக்கமில்லா இறைவனை இறைஞ்சி அழைத்தேன்
என்னுள் எதிரெதிராக நானும் மனதும்
அலுவல் செல்ல நேரமானதை உணர்ந்து
இறங்கு!! என்றது ஒன்று- நழுவ
விடுவது ஏனோ என்பது மற்றொன்று
முடிவில் மனது வென்றது இறங்கநினைத்து
ஏக்கமாய்ப் பார்த்தேன் அவளை நிமிர்ந்து
என் மனக்குரல் கேட்டதோ தெரியவில்லை
பார்த்தாள் என்னை தலை நிமிர்ந்து
எதையோ தொலைத்தது போல் புரியாமல்
தயங்கி நிற்க வண்டிநகர உத்தரவானது
அதையும் பொருட்படுத்தாமல் சிலர் ஏறி
இறங்கவும்இறங்காமல் இருக்க சபலப்பட்டது உள்ளம்
என் பேருந்து நிறுத்தம் வந்தும் அவள்
இறங்கவில்லை எனக்கோ இறங்க மனமில்லை
இரக்கமில்லா இறைவனை இறைஞ்சி அழைத்தேன்
என்னுள் எதிரெதிராக நானும் மனதும்
அலுவல் செல்ல நேரமானதை உணர்ந்து
இறங்கு!! என்றது ஒன்று- நழுவ
விடுவது ஏனோ என்பது மற்றொன்று
முடிவில் மனது வென்றது இறங்கநினைத்து
ஏக்கமாய்ப் பார்த்தேன் அவளை நிமிர்ந்து
என் மனக்குரல் கேட்டதோ தெரியவில்லை
பார்த்தாள் என்னை தலை நிமிர்ந்து
எதையோ தொலைத்தது போல் புரியாமல்
தயங்கி நிற்க வண்டிநகர உத்தரவானது
அதையும் பொருட்படுத்தாமல் சிலர் ஏறி
இறங்கவும்இறங்காமல் இருக்க சபலப்பட்டது உள்ளம்
1.8 அவளருகே நான்
மெய் அப்பன் அவனுளன் என
மெய் சிலிர்க்க வைத்தான், என்னை!
மெய்யோடு என் உயிரைக் கலந்த அவளை,
மெய்யாகப் பார்த்ததும், மெய் மறந்தேன்!
அவள் பொன்னோ, சிலையோ, வரைந்து
வைத்த சித்திரமோ, விளங்காமல் திகைத்தேன்!
கைப்படாமல், தேவதை தந்த பிரசாதமாய்
பேருந்துச் சீட்டும், சில்லறைக் காசும்!
பாவையவள் பதுமைபோல் அழகாய் இருந்தாள்
நீளச்சுருள் கூந்தலும், அதில் அழகான புஶ்பமும்,
கலையான முகமும், வெண்ணிற ஆடையும்,
வெண்ணிலவெனக் கண்டேன் மென்மையாய் நகைத்தாள்.
ஒடுங்கியுமின்றி பூசியுமின்றி அளவாய்,
அவள் அறியாமல் அவளழகை ரசித்தேன்.
அலுங்காமல் இருந்தாள், கொளுத்தும் வெயிலிலும்!
குளுமைக்காகச் சென்றேன், அவளருகே நான்!!
மெய் சிலிர்க்க வைத்தான், என்னை!
மெய்யோடு என் உயிரைக் கலந்த அவளை,
மெய்யாகப் பார்த்ததும், மெய் மறந்தேன்!
அவள் பொன்னோ, சிலையோ, வரைந்து
வைத்த சித்திரமோ, விளங்காமல் திகைத்தேன்!
கைப்படாமல், தேவதை தந்த பிரசாதமாய்
பேருந்துச் சீட்டும், சில்லறைக் காசும்!
பாவையவள் பதுமைபோல் அழகாய் இருந்தாள்
நீளச்சுருள் கூந்தலும், அதில் அழகான புஶ்பமும்,
கலையான முகமும், வெண்ணிற ஆடையும்,
வெண்ணிலவெனக் கண்டேன் மென்மையாய் நகைத்தாள்.
ஒடுங்கியுமின்றி பூசியுமின்றி அளவாய்,
அவள் அறியாமல் அவளழகை ரசித்தேன்.
அலுங்காமல் இருந்தாள், கொளுத்தும் வெயிலிலும்!
குளுமைக்காகச் சென்றேன், அவளருகே நான்!!
1.7 வந்தாள் என் தேவதை
மானே தேனே மயிலே என்று
எதுகையும் மோனையும் தவழ பாடும்
புலவனோ நான், இல்லை- காதலியை
எதிர்பார்த்துக் காத்திருக்கும் காதலனடி நான்!
காதலனும்! காதலியுமா? என வியப்பில்
விவரம் ஏதும் அறியாமல், மனதில்
கலவரம் கொள்ளாமல், நிலவரமறிந்து,
சுயவரன் தேடாதே! ஆணையிட்டது மனது!
எனக்கான பேருந்து முந்திக்கொண்டு வர
வேண்டா வெறுப்பாய் அலுவல் செல்ல
புழுக்கம் சூழ நெரிசல் சூழ
இன்று போய் நாளைவா என்பதுபோலானது
ஓடியும் தேடியும் வீதிகளில் அலைந்தும்
இருமணிநேரம் காத்ததும்- இறைவா!!
பயனற்றுப்போனதோ? என்றபோது- நடத்துநரிடம்
என்சீட்டைப் பெற்றுத் தந்தாள் என்தேவதை.
எதுகையும் மோனையும் தவழ பாடும்
புலவனோ நான், இல்லை- காதலியை
எதிர்பார்த்துக் காத்திருக்கும் காதலனடி நான்!
காதலனும்! காதலியுமா? என வியப்பில்
விவரம் ஏதும் அறியாமல், மனதில்
கலவரம் கொள்ளாமல், நிலவரமறிந்து,
சுயவரன் தேடாதே! ஆணையிட்டது மனது!
எனக்கான பேருந்து முந்திக்கொண்டு வர
வேண்டா வெறுப்பாய் அலுவல் செல்ல
புழுக்கம் சூழ நெரிசல் சூழ
இன்று போய் நாளைவா என்பதுபோலானது
ஓடியும் தேடியும் வீதிகளில் அலைந்தும்
இருமணிநேரம் காத்ததும்- இறைவா!!
பயனற்றுப்போனதோ? என்றபோது- நடத்துநரிடம்
என்சீட்டைப் பெற்றுத் தந்தாள் என்தேவதை.
1.6 மறுமுறை காண வரம் தருவாளோ?
காவலாய் நானிருக்க என் உள்ளமோ
சிறைதாண்டும் கைதியானது அவளைக்காண
நூருமுறை பார்த்தேன் கடிகாரத்தில் நேரம்
இரக்கமற்ற முட்கள் மெதுவாய்ச் சுழன்றது
பேருந்தின் நேரப்பட்டியலைப் பலமுறை பார்த்தேன்
என் கடிகார நேரத்தை சந்தேகமற களைந்தேன்
எனக்கான இரண்டு பேருந்தை நழுவவிட்டேன்
அவளேறும் பேருந்திற்காக காத்திருந்தேன்
முக்கி முனங்கி இருமணிநேரம் சென்றது
நான்கு முறை தேனீர் பருகியானது
புகைப்பிடிக்கும் பழக்கம் எனக்கில்லை என்றாலும்
புகைப்போர் விடும்புகை என் சுவாசமானது
நேற்று இந்நேரம் அவள் வந்தநேரம்
இன்றும் வருவாளோ வாராமல் போவாளோ?
இருமணிநேரம் தவமாய் நின்றதற்கு
மறுமுறை காணும் வரம் தருவாளோ?
சிறைதாண்டும் கைதியானது அவளைக்காண
நூருமுறை பார்த்தேன் கடிகாரத்தில் நேரம்
இரக்கமற்ற முட்கள் மெதுவாய்ச் சுழன்றது
பேருந்தின் நேரப்பட்டியலைப் பலமுறை பார்த்தேன்
என் கடிகார நேரத்தை சந்தேகமற களைந்தேன்
எனக்கான இரண்டு பேருந்தை நழுவவிட்டேன்
அவளேறும் பேருந்திற்காக காத்திருந்தேன்
முக்கி முனங்கி இருமணிநேரம் சென்றது
நான்கு முறை தேனீர் பருகியானது
புகைப்பிடிக்கும் பழக்கம் எனக்கில்லை என்றாலும்
புகைப்போர் விடும்புகை என் சுவாசமானது
நேற்று இந்நேரம் அவள் வந்தநேரம்
இன்றும் வருவாளோ வாராமல் போவாளோ?
இருமணிநேரம் தவமாய் நின்றதற்கு
மறுமுறை காணும் வரம் தருவாளோ?
1.5 பரபரப்பாய் நானிருந்தேன்
விடிகாலை ஐந்தேயானாலும் முழுமையாய் விழித்திருந்தேன்
உடற்பயிற்சி என்று காலணிகளோடு
வியர்வை சிந்த மூச்சு முட்ட
ஓடினேனோ? தேடினேனோ? தெரியவில்லை தெருத்தெருவாய்
ஒரு வீதி மிச்சமின்றி ஒட்டமும் நடையுமாய்
இருபக்கம் பார்த்தும் அவ்வப்போது திரும்பியும்
புதிதாய் நானோட, நாய்களும் குரைக்க,
இரக்கமே இல்லாமல் கால்கள் என்னைத் திட்ட
அவசரமாய் அலுவலகம் செல்ல விரைந்தேன்
அலமாரி முழுதும் ஆடைகள் இருந்தும்
அனைத்தும் உடுத்தி திருப்தியின்றி கலைத்தேன்
அவளைப் பார்க்கும் தருணம் எதிர்பார்த்து
பத்துமணிக்கே அலுவலகம், ஒன்பதுமணிக்கு பேருந்து
பைத்தியமாய் எட்டுமணிக்கெல்லாம் சென்றேன்
பண்பட்டவனாய்த் தெரிய அவ்வப்பொழுது சரிசெய்தேன்
பளிச்சென்று வருவாளோ பரபரப்பாய் நானிருந்தேன்.
உடற்பயிற்சி என்று காலணிகளோடு
வியர்வை சிந்த மூச்சு முட்ட
ஓடினேனோ? தேடினேனோ? தெரியவில்லை தெருத்தெருவாய்
ஒரு வீதி மிச்சமின்றி ஒட்டமும் நடையுமாய்
இருபக்கம் பார்த்தும் அவ்வப்போது திரும்பியும்
புதிதாய் நானோட, நாய்களும் குரைக்க,
இரக்கமே இல்லாமல் கால்கள் என்னைத் திட்ட
அவசரமாய் அலுவலகம் செல்ல விரைந்தேன்
அலமாரி முழுதும் ஆடைகள் இருந்தும்
அனைத்தும் உடுத்தி திருப்தியின்றி கலைத்தேன்
அவளைப் பார்க்கும் தருணம் எதிர்பார்த்து
பத்துமணிக்கே அலுவலகம், ஒன்பதுமணிக்கு பேருந்து
பைத்தியமாய் எட்டுமணிக்கெல்லாம் சென்றேன்
பண்பட்டவனாய்த் தெரிய அவ்வப்பொழுது சரிசெய்தேன்
பளிச்சென்று வருவாளோ பரபரப்பாய் நானிருந்தேன்.
1.4 என்பித்தம் தெளியுமோ?
நிதானமாய் இருந்தேன் தியானத்தில் அமர்ந்தேன்
குரங்கான மனதை ஒருங்கிணைக்க முயன்றேன்
பொறுமையாய் மனதில் பலவற்றை ஆராய
பலகோணங்கள் கண்டும் விடையின்றிக் களைத்தேன்.
பெற்றோர் இருக்க நானே முயல்வதோ?
அவர்களுக்கு நான் இழைக்கும் தீங்கோ?
எந்த ஊரொ? குலமோ? கோத்திரமோ?
அட முட்டாளே காதலுக்கு இதெல்லாம் தேவைதானோ?
சுற்றம் சாடுமோ? சமூகம் சாடுமோ?
தமக்கை திருமணம் கேள்விக்குறி ஆகிடுமோ?
காதலித்து மணம் முடித்தால் கேளிக் கூத்தாகிடுமோ?
அப்படியும் ஒரு திருமணம் தேவைதானோ?
மறந்திடலாமோ அவளை? அதுதான் முடியுமோ?
நண்பனிடம் பகிர்ந்தால் விடையேதும் கிடைக்குமோ?
ஒருகணமே இப்படியென்றால் வாழ்க்கைமுழுதும் எவ்வாறோ?
எதைத் தின்னால் என்பித்தம் தெளியுமோ?
குரங்கான மனதை ஒருங்கிணைக்க முயன்றேன்
பொறுமையாய் மனதில் பலவற்றை ஆராய
பலகோணங்கள் கண்டும் விடையின்றிக் களைத்தேன்.
பெற்றோர் இருக்க நானே முயல்வதோ?
அவர்களுக்கு நான் இழைக்கும் தீங்கோ?
எந்த ஊரொ? குலமோ? கோத்திரமோ?
அட முட்டாளே காதலுக்கு இதெல்லாம் தேவைதானோ?
சுற்றம் சாடுமோ? சமூகம் சாடுமோ?
தமக்கை திருமணம் கேள்விக்குறி ஆகிடுமோ?
காதலித்து மணம் முடித்தால் கேளிக் கூத்தாகிடுமோ?
அப்படியும் ஒரு திருமணம் தேவைதானோ?
மறந்திடலாமோ அவளை? அதுதான் முடியுமோ?
நண்பனிடம் பகிர்ந்தால் விடையேதும் கிடைக்குமோ?
ஒருகணமே இப்படியென்றால் வாழ்க்கைமுழுதும் எவ்வாறோ?
எதைத் தின்னால் என்பித்தம் தெளியுமோ?
1.3 எனக்குள் நான்!!
கல்லூரி மாணவியோ? பணியில் உள்ளவளோ?
மணம் முடித்திருப்பாளோ? தனித்துத்தான் இருப்பாளோ?
சாந்தமாய் இருப்பாளோ? சாஸ்வதமாய் இருப்பாளோ?
மூத்தவளோ? இளையவளோ? அவள் எவ்வாறோ?
அழகால் கவர்ந்தேனோ? இது நிலைக்குமோ?
மதியால் பார்த்தேனோ? இது உண்மைதானோ?
இறைவா! இது கண்டதும் காதலோ?
அதில் எனக்கு நம்பிக்கைதான் உண்டோ?
இதே கணப்பொழுதில் பலரைப் பார்த்திருந்தும்
இவள் மட்டும் இதயம் கவர்ந்தது ஏனோ?
இறைவா!! இதுவயதின் குறைபாடு என்பேனோ?
நிதானமாய் உள்ளேனோ? தறிகெட்டுப் போனேனோ?
பணி மாற்றத்திலும் தயங்காத நான்!!
இப்பெண்ணைக் கண்டு ஏனித்தனைக் கேள்விகளோ?
நிதானமாய் இருக்கும்படி மிகவும் சமாதானமாய்
ஒரு குரல்! எனக்குள் நான்!!
மணம் முடித்திருப்பாளோ? தனித்துத்தான் இருப்பாளோ?
சாந்தமாய் இருப்பாளோ? சாஸ்வதமாய் இருப்பாளோ?
மூத்தவளோ? இளையவளோ? அவள் எவ்வாறோ?
அழகால் கவர்ந்தேனோ? இது நிலைக்குமோ?
மதியால் பார்த்தேனோ? இது உண்மைதானோ?
இறைவா! இது கண்டதும் காதலோ?
அதில் எனக்கு நம்பிக்கைதான் உண்டோ?
இதே கணப்பொழுதில் பலரைப் பார்த்திருந்தும்
இவள் மட்டும் இதயம் கவர்ந்தது ஏனோ?
இறைவா!! இதுவயதின் குறைபாடு என்பேனோ?
நிதானமாய் உள்ளேனோ? தறிகெட்டுப் போனேனோ?
பணி மாற்றத்திலும் தயங்காத நான்!!
இப்பெண்ணைக் கண்டு ஏனித்தனைக் கேள்விகளோ?
நிதானமாய் இருக்கும்படி மிகவும் சமாதானமாய்
ஒரு குரல்! எனக்குள் நான்!!
Friday, July 27, 2007
1.2 எதிர்பார்த்து இருந்தேன்
எதிர்பார்த்து இருந்தேன்
காதலாய் வந்தாள், கண்சிமிட்டி நின்றாள்
ஒரு கணமே கண்டேன்...சிலையாகப் பதிந்தாள்
பளிங்காகச் சிரித்தாள் என் இதயத்தைத் திறந்தாள்
கண் மூடி நின்றேன்..இதயத்தில் நின்றாள்
தனியாகச் சென்றேன் அவளோடு பேச
நதியோரம் நானும் என் இதயத்தில் அவளும்
பூஞ்சோலை முழுதும் உலாவாகச் சென்றோம்
நிழலாக மரமும் இதமாக அவளும்
புல்வெளியில் தனியே நதியின் மெல்லிசையில்
என் இதயத்தில் அவளும் அவள்மடியில் நானும்
கனவுகள் கலைய, இமைகளும் விரிய
மென்மையாகச் சிரித்தேன் எதிர்பார்த்து இருந்தேன்.
காதலாய் வந்தாள், கண்சிமிட்டி நின்றாள்
ஒரு கணமே கண்டேன்...சிலையாகப் பதிந்தாள்
பளிங்காகச் சிரித்தாள் என் இதயத்தைத் திறந்தாள்
கண் மூடி நின்றேன்..இதயத்தில் நின்றாள்
தனியாகச் சென்றேன் அவளோடு பேச
நதியோரம் நானும் என் இதயத்தில் அவளும்
பூஞ்சோலை முழுதும் உலாவாகச் சென்றோம்
நிழலாக மரமும் இதமாக அவளும்
புல்வெளியில் தனியே நதியின் மெல்லிசையில்
என் இதயத்தில் அவளும் அவள்மடியில் நானும்
கனவுகள் கலைய, இமைகளும் விரிய
மென்மையாகச் சிரித்தேன் எதிர்பார்த்து இருந்தேன்.
Thursday, July 26, 2007
1.1 கணப்பொழுதே ஆனாலும் கனமாகப் பதிந்தாள்
மெல்லெனத் திறந்த கதவினூடே
சில்லென விடிகாலைத் தென்றல்
ஆமைபோல் நுழைந்ததென் போர்வையினூடே
விரைந்து விழித்ததுள்ளம் அவள் நினைவால்
சிற்பமோ? சித்திரமோ? அவள் ஆக்கிரமித்தாள்
இதயம் முழுவதும் குருதி புகமுடியாமல்
அகலா நினைவால், இலையான யென்னுள்ளம்
இறைவா!! மலை போல் கனத்தாள்
எங்கு கண்டேன் எவ்வாறு கண்டேன்
ஏன் கண்டேன் என்னைக் கொல்ல
அவள் நினைவால் என்
உயிர் வாடும் மெல்ல மெல்ல
உச்சியில் ஆதவன் கோபமாய் வீச
துள்ளளாய் வந்தாள் பேருந்தில் ஏற
சில்லென முறைத்தாள் முழுமையாய் உறைந்தேன்
கணப்பொழுதே ஆனாலும் கனமாகப் பதிந்தாள்.
சில்லென விடிகாலைத் தென்றல்
ஆமைபோல் நுழைந்ததென் போர்வையினூடே
விரைந்து விழித்ததுள்ளம் அவள் நினைவால்
சிற்பமோ? சித்திரமோ? அவள் ஆக்கிரமித்தாள்
இதயம் முழுவதும் குருதி புகமுடியாமல்
அகலா நினைவால், இலையான யென்னுள்ளம்
இறைவா!! மலை போல் கனத்தாள்
எங்கு கண்டேன் எவ்வாறு கண்டேன்
ஏன் கண்டேன் என்னைக் கொல்ல
அவள் நினைவால் என்
உயிர் வாடும் மெல்ல மெல்ல
உச்சியில் ஆதவன் கோபமாய் வீச
துள்ளளாய் வந்தாள் பேருந்தில் ஏற
சில்லென முறைத்தாள் முழுமையாய் உறைந்தேன்
கணப்பொழுதே ஆனாலும் கனமாகப் பதிந்தாள்.
Subscribe to:
Posts (Atom)