முன்னுரை

இது ஒரு காதலை ஒட்டி, அன்றாட வாழ்க்கையில் நடக்கும் நிகழ்வுகளின் மையமாக வைத்து எனது வெளிப்பாடு.

சுருக்கமாக முற்போக்கு சிந்தனை உடைய ஒரு ஆண், இவனைப்போல் முற்போக்கு சிந்தனையில்லாத ஒரு பெண்ணை சந்திக்கிறான் கண்டதும் காதல் வசபடுகிறான். சிறிது சிறிதாக இவளை மாற்ற முயல்கிறான்.

இதில், இருவருக்கும் இடையே நடக்கும் உரையாடல், அவர்களுக்கிடையே பொங்கும் காதல் என இத்தொகுப்பில் கொண்டுவர முயற்சித்திருக்கிறேன்.

Thursday, August 23, 2007

1.3 எனக்குள் நான்!!

கல்லூரி மாணவியோ? பணியில் உள்ளவளோ?
மணம் முடித்திருப்பாளோ? தனித்துத்தான் இருப்பாளோ?
சாந்தமாய் இருப்பாளோ? சாஸ்வதமாய் இருப்பாளோ?
மூத்தவளோ? இளையவளோ? அவள் எவ்வாறோ?

அழகால் கவர்ந்தேனோ? இது நிலைக்குமோ?
மதியால் பார்த்தேனோ? இது உண்மைதானோ?
இறைவா! இது கண்டதும் காதலோ?
அதில் எனக்கு நம்பிக்கைதான் உண்டோ?

இதே கணப்பொழுதில் பலரைப் பார்த்திருந்தும்
இவள் மட்டும் இதயம் கவர்ந்தது ஏனோ?
இறைவா!! இதுவயதின் குறைபாடு என்பேனோ?
நிதானமாய் உள்ளேனோ? தறிகெட்டுப் போனேனோ?

பணி மாற்றத்திலும் தயங்காத நான்!!
இப்பெண்ணைக் கண்டு ஏனித்தனைக் கேள்விகளோ?
நிதானமாய் இருக்கும்படி மிகவும் சமாதானமாய்
ஒரு குரல்! எனக்குள் நான்!!

No comments: