நிதானமாய் இருந்தேன் தியானத்தில் அமர்ந்தேன்
குரங்கான மனதை ஒருங்கிணைக்க முயன்றேன்
பொறுமையாய் மனதில் பலவற்றை ஆராய
பலகோணங்கள் கண்டும் விடையின்றிக் களைத்தேன்.
பெற்றோர் இருக்க நானே முயல்வதோ?
அவர்களுக்கு நான் இழைக்கும் தீங்கோ?
எந்த ஊரொ? குலமோ? கோத்திரமோ?
அட முட்டாளே காதலுக்கு இதெல்லாம் தேவைதானோ?
சுற்றம் சாடுமோ? சமூகம் சாடுமோ?
தமக்கை திருமணம் கேள்விக்குறி ஆகிடுமோ?
காதலித்து மணம் முடித்தால் கேளிக் கூத்தாகிடுமோ?
அப்படியும் ஒரு திருமணம் தேவைதானோ?
மறந்திடலாமோ அவளை? அதுதான் முடியுமோ?
நண்பனிடம் பகிர்ந்தால் விடையேதும் கிடைக்குமோ?
ஒருகணமே இப்படியென்றால் வாழ்க்கைமுழுதும் எவ்வாறோ?
எதைத் தின்னால் என்பித்தம் தெளியுமோ?
முன்னுரை
இது ஒரு காதலை ஒட்டி, அன்றாட வாழ்க்கையில் நடக்கும் நிகழ்வுகளின் மையமாக வைத்து எனது வெளிப்பாடு.
சுருக்கமாக முற்போக்கு சிந்தனை உடைய ஒரு ஆண், இவனைப்போல் முற்போக்கு சிந்தனையில்லாத ஒரு பெண்ணை சந்திக்கிறான் கண்டதும் காதல் வசபடுகிறான். சிறிது சிறிதாக இவளை மாற்ற முயல்கிறான்.
இதில், இருவருக்கும் இடையே நடக்கும் உரையாடல், அவர்களுக்கிடையே பொங்கும் காதல் என இத்தொகுப்பில் கொண்டுவர முயற்சித்திருக்கிறேன்.

Subscribe to:
Post Comments (Atom)
2 comments:
idhu un anubavama .....karpanaya .????
aazhamana vaarthaikal .....nd give each of us a unique feeling i guess its the speciality of TAMIL ...anyways i enjoyed this nd 1.02 a lot .....
keep writing more ....ub
idu karpanai illai nijam...
i had a dilemma whether i should accept a proposal or not.
these words are experience out of that.... that was 5 yrs back..
Post a Comment