அதே நேரம், அதே பேருந்து, அவனும் இவளும்
அவன் அவனிடத்தில், இவள் இவளிடத்தில்
அவரவர் அலுவல் சென்றனர் இருவரும்
அவளிறங்கியதும் இவனிறங்கி குறுக்கிட்டான்
திடுக்கிட்டாள், புன்னகைத்தான், கம்பீரமாய்
ஹாய்! நான் கார்த்திக், இரு நிமிடம்!
பேசவேண்டும்! மாலை சந்திப்போம்!
ஆறு மணி, கபாலீச்வரர் கோவில்!
காத்திருப்பேன், காக்க வைக்காதே!
சீ யூ பை! ஓடும் பேருந்தில் ஏறினான் கை வீசி
சிலையென நின்றாள்! அதற்குள் மறைந்தான்
இருநிமிடம் மௌனமனாள்!
மாலை எழேகால்! கோவிலுக்கு வரவில்லை!
மயிலை பேருந்து நிருத்தம்,
மாலை நெருசலில் பிதுங்கி இறங்கினாள்!
தெருமுனையில் இவன் இருப்பதை அவள் கண்டாள்
கையில் தேனீர் கோப்பையோடு
கண்டாள் சென்றாள்! இவனுக்கது
குற்றமாய் பார்பதாய் தெரியவில்லை
வரவேற்பதாகவும் தெரியவில்லை
அதென்ன பார்வையோ, புரியவில்லை
ஹாய்! மீண்டும் குறுக்கிட்டான்!
நகர்ந்து சென்றாள், கூடவே இவனும்,
"கேள்! உன் பெயர் மஹன்னீயா!" என்றான்
பதிலுக்கு "இருபத்தி மூன்று வருடங்களாக அதேதான், யார் மறுத்தார்?" என்றாள் அகந்தையாய்,
"ஹ ஹ ஹ! நன்றி உன் வயதை கூறியதற்கு"
உளரியதை உணர்ந்து உதட்டை கடித்தாள்!
முன்னுரை
இது ஒரு காதலை ஒட்டி, அன்றாட வாழ்க்கையில் நடக்கும் நிகழ்வுகளின் மையமாக வைத்து எனது வெளிப்பாடு.
சுருக்கமாக முற்போக்கு சிந்தனை உடைய ஒரு ஆண், இவனைப்போல் முற்போக்கு சிந்தனையில்லாத ஒரு பெண்ணை சந்திக்கிறான் கண்டதும் காதல் வசபடுகிறான். சிறிது சிறிதாக இவளை மாற்ற முயல்கிறான்.
இதில், இருவருக்கும் இடையே நடக்கும் உரையாடல், அவர்களுக்கிடையே பொங்கும் காதல் என இத்தொகுப்பில் கொண்டுவர முயற்சித்திருக்கிறேன்.

Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment