முன்னுரை

இது ஒரு காதலை ஒட்டி, அன்றாட வாழ்க்கையில் நடக்கும் நிகழ்வுகளின் மையமாக வைத்து எனது வெளிப்பாடு.

சுருக்கமாக முற்போக்கு சிந்தனை உடைய ஒரு ஆண், இவனைப்போல் முற்போக்கு சிந்தனையில்லாத ஒரு பெண்ணை சந்திக்கிறான் கண்டதும் காதல் வசபடுகிறான். சிறிது சிறிதாக இவளை மாற்ற முயல்கிறான்.

இதில், இருவருக்கும் இடையே நடக்கும் உரையாடல், அவர்களுக்கிடையே பொங்கும் காதல் என இத்தொகுப்பில் கொண்டுவர முயற்சித்திருக்கிறேன்.

Friday, August 24, 2007

1.11 வணங்கி நின்றாள் இவன் முன்னே

அவள் நினைவிலேயே வீடு வர
சிற்றுண்டியை உண்டான் ஆற அமர
நாற்காலியில் அமர்ந்தபடியே கண்ணசர
கணவினில் கண்டான் கண் குளிர

கோவிலில் சேன்று இறை வணங்க
தாய் அழைத்ததும் இவன் இணங்க
பவ்வியமாய் சென்றான் இறையிடம் விடை கேட்க்க
கை கூப்பி ந்ன்றான் இமை இருக

"இறைவா தருவாய் அவளை வரமாய்
இருப்பேன் அவளுக்கு சேயாய் தாயாய்
கண்ணுக்கு கண்னாய் உயிருக்கு உயிராய்
என் ஆயுள் முழுதாய் அதர்க்கும் மேலாய்"

சலனமே இல்லாமல் காதலிக்க முனைந்தான்
யாருக்கும் குறை இல்லாமல் காதலியை மனக்க
இறையருள் வேண்டி மௌணத்தில் கெஞ்சி
இருகிய கண்கள் விரிய, வரமாய், பதிலாய்,
இமை மூடி வணங்கி நின்றாள் இவன் முன்னே!

2 comments:

Anonymous said...

beautiful last 4 lines ......nijama sollu ithu karpanai illai thaney ....who that girl ....

Karthigeyan said...

sathiyama karpanai dhan :)